கும்பகோணம், அக். 23 –
கும்பகோணத்தில் தொடர்ந்து 31 ஆண்டுகளாக ஏழை, எளிய பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் உபகரணங்களை வழங்கி வரும் தஞ்சை மாவட்டம் சோழிய வேளாளர் சங்கம் வழங்கி வருகிறது.
அதனைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டுக்கான உதவிகளை இன்று 45 பேருக்கு, ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித் தொகையும், சுமார் 350 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் வழங்கினார்கள்.
தஞ்சை மாவட்ட சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏழை எளிய பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெறும் அதுபோல இன்று, தொடர்ந்து 31ம் ஆண்டாக இவ்விழா, சங்கத்தின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் சிவ சூரியகுமார் மற்றும் தஞ்சை மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமையிலும், எஸ் செல்வராஜ், திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மரு. எஸ் மனோகரன், கேஎம்பிகே செல்வராஜ், எஸ் எம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையிலும் தனியார் திருமண மண்டபத்தில் எளிமையாக நடைபெற்றது
இதில், ஏழை, எளிய பள்ளி மாணவ மாணவியர்கள் 45 பேருக்கு, ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையும், சுமார் 350 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது இந்நிகழ்வில், ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் அவர் தம் பெற்றோர் மற்றும் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்