காஞ்சிபுரம், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
20 க்கும் மேற்பட்ட பழ வகைகள் அடுக்கி வைத்து, மிகப் பிரமாண்டமான பழக்கடை போல் காட்சியளிக்க கூடிய கோடைக்கால நீர் மோர் பந்தலை காஞ்சிபுரம் அதிமுக ஏற்பாடு செய்து இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் விழா நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் வளர்மதி அதனை திறந்து வைத்து பொது மக்களுக்கு பழம் மற்றும் குளிர் பானங்களை வழங்கினார்.
சிறிது நேரத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு பைகளில் மூட்டை போல் கட்டி அள்ளி சென்றனர். பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நுழைவு வாயிலில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாட்டில் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், தர்பூசணி, கிர்ணி பழம், அண்ணாச்சி பழம் போன்ற பல்வேறு பல வகைகள் கொண்ட 20க்கும் சாலை ஓரம் தள்ளுவண்டி கடை போல் பிரமாண்டமாக அமைத்து மாபெரும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதனை முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் சோமசுந்தரம் வருகை தந்து மாபெரும் தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி பொதுமக்களை ஒருவன் பின் ஒருவராக நீண்ட வரிசையில் காத்திருந்து பழ வகைகளை வாங்கி சென்றனர். சிறிது நேரத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நின்ற நிலையில் திடீரென பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக உள்ளே புகுந்து தள்ளுவண்டி கடை போல் அமைக்கப்பட்ட பழைய வகைகளை மூட்டை கட்டி பைகளில் கட்டி தலைமையில் தூக்கி வைத்துக் கொண்டு அள்ளி சென்றனர். ஏராளமான மக்கள் ஒன்று கூடி ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு பழங்களை அள்ளி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பல வகைகள் மட்டுமல்லாமல் ரோஸ் மில்க், பாதாம் மில்க் ஷேக், கரும்புச்சாறு, கிர்ணி பழம் ஜூஸ், கூழ், மோர், குளிர்பானங்கள், ஐஸ் கடை போன்றவை அமைத்து மாபெரும் தண்ணீர் பந்தலை திறந்தது பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது.






















