செங்கல்பட்டு, அக். 21 –
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சின்ன திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீ வஜ்ரகிரி மலையில் அமைந்துள்ள அச்சிறுபாக்கம் அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் ஐப்பசி மாத கிரிவலம் நேற்று நடைப்பெற்றது.
நேற்று 20.10.2021 ஆம் தேதி மாலை சுமார் 5 மணி அளவில் அச்சிறுபாக்கம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வஜ்ரகிரி வழிவிடு விநாயகர் ஆலயத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும் திருவாசகம், திருப்பதிகம் பாடி வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பித்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி, ஸ்ரீ வஜ்ரகிரி மகான் குருமகா சன்னிதானம் வடபாதி சித்தர் சுவாமிகளின் திருக்கரங்களால் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆன்மீகப் பெரியவர்களும், சிவனடியார்களும் கிராம பொது மக்களும் வள்ளலார் சுத்த சன்மார்க்கத்தை சேர்ந்த அடியார்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும், ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல பொறுப்பாளர் அச்சிறுப்பாக்கம் எஸ். செல்வம், கிரிவல குழு தலைவர் பிருங்கி மலை மு. சரவணன் ஜி, ஏ. எம். ஜெய்சிவசேனாவின் தலைமை ஒருங்கிணைப்பாளர். பிரிங்கி. கி. இராமசுப்பிரமணி, திருநாவுக்கரசு, கலந்துகொண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இந்த கிரிவலத்தில் முக்கிய விசேஷமாக அகத்தியர் சன்மார்க்க சங்கம் அதன் நிர்வாகிகள் டாக்டர் முருகவேல். திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு 108 சித்தர் போற்றிகளை. சொல்லி ஓம் சரவணபவா ஜோதி ஏற்றி கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.
நிகழ்வின் முடிவில் கிரிவலம் சுற்றி வந்த அனைத்து அடியார்களுக்கும் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.