சென்னை, அக். 20 –

நாம் அறிந்து கொள்ள ஆயிரமாயிரம் நமக்கு பயன் தரும் செய்திகள் உலகில் உள்ளது. அதுவும் நம்மருகிலும் வந்து கடந்து செல்வதும் உண்டு, ஆனால் அதனை அறிந்துக் கொள்ள நாம் சில நேரங்களில், தவறி விடுவதும் உண்டு. அதனால் நாம் அதற்கான தேவைகள் நமக்கு வரும் போது, அதனைத் தேடி பல நிலை அலைச்சல்கள் மற்றும் காலவிரயங்களை செய்து அவற்றை அறிய முற்படுகிறோம்.

பல்வேறு துறைகளில் தொழில் முனைபவர்கள் அவற்றில் வியாபார நோக்கங்கள் இருப்பினும், அதனோடு சமுதாய முன்னேற்றமும் அதனால் ஏற்பட வேண்டும் என நினைத்து தொழில் புரிபவர்கள் எண்ணிக்கை என்பது மிகச் சொற்பமே ..

அப்படி சமுதாய பலன் மற்றும் முன்னேற்றங்களை அடிப்படையாக கொண்டு தொழில் புரிபவர்களை மக்களிடம் அடையாளம் காட்டும் நோக்கத்துடனே பல்வேறு துறைகளில் இப்படிப் பட்டவர்களை கண்டறிந்து அவர்களை அறிமுகம் படுத்தவே நமது தம்பட்டம் நாளிதழில் அறிவோம் ஆயிரம் என்ற பகுதியை உருவாக்கி வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

அதுப் போன்று இன்றைய அறிவோம் ஆயிரம் பகுதியில் கிரீன்  விஷன்  என்டர்பிரைசஸ் நிறுவனத் தலைவர் முனைவர் திரு கண்ணன் குமாரசுவாமியை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். வாருங்கள் இனி இவரைப் பற்றி பார்ப்போம்.

உணவை மருந்தாக உண்ணுங்கள் இல்லையெனில் மருந்தை உணவாக உண்ணும் நிலை வரும் என்ற அவரின் அவ்வரிகளை கண்டதும் உங்களைப் போலவே எங்களையும் அவ் வரிகள் கவர்ந்திழுத்தது.. அதன் பொருள் பற்றி அவரிடம் கேட்டறிந்ததின் செய்தியை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறோம்.

அறிமுகம் :

முனைவர் திரு. கண்ணன் குமாரசுவாமி கிரீன்  விஷன் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் தலைவராவர். மேலும் அவர் செய்து வரும் தொழிலோடு சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய உணவு ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.

மாண்புமிகு இயற்கை விவசாய ஆர்வலர் விஞ்ஞானி டாக்டர். ஜி. நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் ZBNF / SPNF ( சுபாஷ் பாலேகர் இயற்கை விவசாய முறை ) நிறுவனர் அவர்களின் மாணவரும் ஆவார்.

கருத்தரங்கம் :

சமுதாய நோக்குடன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களான அடுத்த தலைமுறைகளும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விவசாயத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஒருநாள் கருத்தரங்குகளையும் இயற்கை விவசாய பண்ணைகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

கருத்தரங்குகளில் கலந்துக் கொள்ளும் நமது இளம் தலைமுறையினர்களுக்கு நமது பாரம்பரிய முறையான அடிப்படை இயற்கை விவசாயம் குறித்து விவசாய பண்ணைகளில் களப் பயிற்சிகளையும் கலப்பட  உணவுகளைப் பற்றியும், ரசாயன விவசாயத்தைப் பற்றி  விழிப்புணர்வும் அளித்து வருகின்றார். இதனால் இயற்கை பேரழிவுகளில் இருந்து தன்னையும் மற்றவர்களையும் காப்பது எப்படி என்பது அவர்கள் தெரிந்து கொள்ள எளிதாகிறது.

மேலும் இவர் பல்வேறு விவசாய பண்ணைகளில் நடத்திய ஒருநாள் பயிற்சிப் பட்டறையின் மூலம் சுமார் 3750 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் மேலும் 50 க்கும் மேற்பட்ட தாவரவியியல் ஆசிரியர்களும் பங்கேற்று இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வும் பயிற்சி பலனும் பெற்றுள்ளனர்.  

முனைவர் பட்டம் :

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயிகளுக்கான இவரின் பங்களிப்பையும், விவசாயத்தில் பாரம்பரிய வழிமுறைகளை மீட்பது மற்றும் ஊட்டச்சத்து உணவை எவ்வாறு உற்பத்தி செய்வது என்ற கற்பித்தல் போன்றவற்றிற்காக இவரைப் பாராட்டி 2020 ஆம் ஆண்டு மதுரையில் யூனிவர்சல் தமிழ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

சமூகத்தொண்டு :

தன்னார்வ தொண்டுகளிலும் தன்னுடன் பல இளைஞர்களை இணைத்துக் கொண்டு பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் மருந்துகள் என உதவிகளை செய்து வருவதால் அவ் இளைஞர்களுக்கு சமூதாய அக்கறை மற்றும் நல்வழி காட்டுதல் போன்ற நற்பண்புகளையும் அவர்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் முதல் தற்போது உள்ள கொரோனா தொற்று பேரிடர் வரை பாதிக்கப் பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்.

தொழில் கிரீன் டவர் :

அவரின் பத்தாண்டு கால இயற்கை விவசாய தேடுதலின் அனுபவத்தால் நஞ்சில்லா இயற்கை உணவு மட்டுமே அரிய வகை நோய்களிலிருந்து காக்கும் என்பதை உணர்ந்த அவர் அதற்கான சமூதாய பார்வையுடன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டதுதான் இந்த ( கிரீன் விஷன் என்டர்பிரைசஸ் ) கிரீன் டவர் தொழிலாகும். அதன் லாப வருவாயில் ஒரு பகுதியை தொண்டு செயல்களுக்காக மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார். இத்தொழிலின் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மக்களுக்கு ஆரோக்யம் தரக் கூடிய மக்களால் எளிதாக பயன் படுத்தக் கூடிய பொருட்களை நியாமான விலையில் வழங்கி வருகிறார்.

உணவு பயன்பாடு மாற்றம் :

இன்றைய கால கட்டத்தில் மாறி வரும் பொருளாதார சூழல் மற்றும் பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கம் இவற்றைப் பயன்படுத்தி உணவு உற்பத்தியை பெருக்கம் செய்யும் வகையிலும், மக்களின் உடல் நலத்தை கண்டு கொள்ளாமல் பணத்தை மட்டுமே மையமாக கொண்டு மரபு மாற்றம் செய்யப்பட்ட மற்றும் வீரிய ரக விதைகளை பயன் படுத்தியும், விளைச்சளை பெருக்குவதாற்காக மனிதர்களுக்கு கேடு விளைவிக்க கூடிய பலவிதமான நச்சுத் தன்மைகள் உடைய ரசாயன உரங்கள் மற்றும் விஷத்தன்மை உடைய பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி நமது உணவு விளைவிக்கப் படுகிறது. மேலும் லாப நோக்கத்திற்காக விளைந்த உணவுப் பொருள்களில் பலவித கலப்படங்களை சேர்த்து நம்மிடம் வந்து சேருகிறது.

இதனைத் தொடர்ந்து உண்டு வருவதால் உடலில் பலவித ரசாயனம் மாற்றங்களை ஏற்படுத்தி நமது உடலில் உள்ள உறுப்புகள் பாதிக்கப் பட்டு எளிதாக நோய் தொற்றிற்கு  ஆளாகி வருகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

நம்மை நாமே பாதுகாப்போம் :

நம்மை நாமே காத்துக் கொள்ளும் பொறுப்பில் நாம் அனைவரும் உள்ளோம். இதனை அறிந்தே கிரீன் விஷன் என்டர்பிரைசஸ் இதன் முதற் கட்ட முயற்சியாக நான்கு சதுர அடியில் 35 வகையான இயற்கை முறையில் நாமே நம் வீட்டில் கலப்படமில்லாத ஊட்டச் சத்து நிறைந்த சில வகை கீரைகள், காய்கறிகள், மூலிகைகள், மற்றும் பூக்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் GREEN TOWER என்கின்ற தயாரிப்பை தமது கிரீன் விஷன் என்டர்பிரைசஸ் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டிற்கு முதன் முறையாக அறிமுகப் படுத்தியுள்ளார்.

திடக்கழிவு உரம் :

இதன் மூலம் தினமும் நம் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் மக்கக் கூடிய திடக்கழிவுகளை இயற்கை எருவாக உற்பத்தி செய்து அதன் மூலம் நஞ்சில்லா உணவைப் பெறுவதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளார்.

தினசரி சராசரியாக ஒரு குடும்பத்தில் இருந்து ஒருகிலோ மக்கக்கூடிய திடக்கழிவுகள் வெளியேற்றப் படுகின்றன. ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்தின் மூலம் 300 லிருந்து 500 கிலோ எடையுள்ள திடக்கழிவுகளை வெளியேற்றுவதன்  மூலம் சரியான முறையில் அந்தக் கழிவுகளை மறு சுழற்சி செய்யப்படாததால். நோய் தொற்றுகள் ஏற்பட்டு நமது ஆரோக்கியம் பாதிப்படைகிறது. மேலை நாடுகளில் இந்த திடக் கழிவுகளை சிறந்த முறையில் கையாள்வதால் பலவிதமான பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைகின்றனர்.

நாமும் நமது வீட்டில் பசுமை இயற்கை விவசாயத்தின் மூலம் ஆரோக்கியமான உணவுகளை நாமே உற்பத்தி செய்து நோயில்லா வாழ்வும் வலியில்லா வாழ்க்கை பெற்று பயன் பெறுவோம் என அவர் குறிப்பிடுகிறார். மேலும் இது தொடர்பாக ஆலோசனை மற்றும் விவரங்கள் அறிந்து நீங்களும் உங்கள் வீட்டிலயே இயற்கை விவசாய தோட்ட பயிற்களை விளைவிக்க முனைவர் கண்ணன் குமாரசுவாமி யை

தொடர்பு கொள்ள கைப்பேசி எண் :  098404 00844 

Email : greenvesion@gmail.com 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here