தாம்பரம், செப். 6 –
இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உசி சிதம்பரனார் 150 வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்து மத மக்கள் ஒற்றுமை, பாதுகாப்பு, போன்ற சித்தாந்தங்களை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் ஜெய் சிவசேனா சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பிரிங்கி இராமசுப்பிரமணியன் தலைமையில் அதன் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்ட வ.உசி 150 வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி தாம்பரம் கடப்பேரி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம் அருகே நடைப் பெற்றது.
அதில் வ.உ.சிதம்பரனார் திருவுருவ படத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைப் பின் தொடந்து இந் நிகழ்சியில் கலந்து கொண்ட அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.