கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை அருகே மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரொக்கப்பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி, மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியபாளையம் தாமரைப்பாக்கம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஹேமலதா தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெரியபாளையம் அடுத்த ஏனாபாக்கம் பகுதியைச் சேர்ந்த விமல் ராஜ் (வயது 23) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தனி துணை ஆட்சியருமான கணேஷ் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டு பிரத்தியேக பையில் சீல் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கருவுலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.