திருவள்ளூர், ஏப். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் தலை நசுங்கி பலியானார்.  மற்றொருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி தப்பிவோடிய டிப்பர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் குப்புராஜ் இவர் டாஸ்மாக் ஊழியராக பணியாற்றி வருகிறார். அதுபோல் தமிழக ஆந்திர எல்லையோரப்  பகுதியான பள்ளிப்பட்டு கரிம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது அன்சாரி என்பவராவர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கி வீட்டிற்கு திருவள்ளூர் அடுத்த ஈக்காடு அருகே வந்து கொண்டிருந்த போது,  அவர்களின் வாகனத்திற்கு பின்னால்  அதிவேகமாக  வந்த டிப்பர் லாரி வளைவில் திரும்பும் போது இரு சக்கர  வாகனத்தின்  மீது  பின்னால் மோதியதில்  முகம்மது அன்சாரி (48) என்பவர்  சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார், அதனையடுத்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார்.

அவ்விபத்துக் குறிந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புல்லரம்பாக்கம் போலீசார் முகமது அன்சாரியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும் அவ்விபத்தில் பலத்த காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் குப்புராஜ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அச்சம்பவம் குறித்து புளரம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தினால் ஏற்பட்டுள்ள கோர உயிரிழப்பு அப்பகுதி வாழ் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here