பொன்னேரி, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் 19 ஏப்ரல் 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக நாடாளு மன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. அதுப் போன்று அந்நாளில் நடைப்பெறும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடிகளின் வாக்கு பெட்டிகளை வைப்பதற்கான பாதுகாப்பு அறை தேடல் பணி இன்று பொன்னேரியில் நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரியில் பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கத் பல்வந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்பு அவ்விடத்தில் எவ்வாறு வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பது எனவும் மேலும் அதனை கண்காணிப்பதற்கு சிசிடிவி கேமராக்களை எங்கு பொருத்துவது என்பது குறித்து தேர்தல் அலுவலர்களிம் கலந்தாலோசித்தார்.
அவ்வாய்வின் போது பயிற்சி கலெக்டர் ஆயுஸ் வெங்கட் வஸ்த், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் துணை வட்டாட்சியர் சீனிவாசன், பொதுப்பணித்துறை (கட்டிடம்) உதவி செயற் பொறியாளர் கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.























