அம்பத்தூர், டிச. 06 –

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மிக்ஜாம் புயலால் பயங்கர காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து 48 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்யத் தொடங்கியது.

இந்நிலையில் சென்னை அடுத்துள்ள அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பத்தூர் ஏரியை ஒட்டிவுள்ள எம்.கே.பி. நகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல்மழையால் ஏற்பட்ட வெள்ளம் அப்பகுதிகளில் புகுந்தது. அப்பகுதிகளில் வசித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வந்த நிலையில் மேலும் அப்பகுதிகளில், மக்களின் பாதுகாப்புக் கருதி மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டதால்,. மேலும் அப்பகுதி வாழ் மிகுந்த அச்சத்துடன் இருந்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் இந்நாள் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸ்சாண்டர், அம்பத்தூர் காவல்துறையினரும், 85 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொற்கொடி கண்ணபிரான் ஆகியோர் அப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் வெள்ளம் சூழ்ந்திருந்த M.k.B. நகர் ஃபேஸ் 2 பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதி வாழ்மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக 2000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு காலை மதியம் மற்றும் இரவு வேளையென மூன்று வேளைகளும் தொடர்ந்து நேற்றும் இன்றும் தொடர்ந்து அரசு சார்பில் உணவளித்து வருகின்றனர். இவ்வாய்வின் போது உடன் அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் டாக்டர் டி.முருகன் செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் ஜெபஸ்டின், துணைத்தலைவர் வைரவப்பெருமாள் மற்றும் சங்க உறுப்பினர்களும் இருந்தனர். மேலும் அவர்கள் அப்பகுதி மக்களுக்கு அரசு வழங்கிடும் உணவுகளை வாகனங்களில் எடுத்து வந்து மக்களுக்கு தொடர்ந்து அவர்கள் இரவு பகல் பார்க்காது சேவையாற்றி வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நலவுதவிகளை செய்தனர். மேலும் குறிப்பிடும் வகையில் அரசின் சார்பில் ஆவின் பாலும் வழங்கினார்கள்.

.தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்த துரித நடவடிக்கைகளால் தற்போது அப்பகுதியில் தேங்கியிருந்த வெள்ள மழைநீர் பெரும்பாலும் வடியத்தொடங்கி மக்களின் அச்சம் தீர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்..

மேலும் மழையையும் பொருட்படுத்தாது அயராது உழைத்து அப்பகுதி மக்களின் துயர் போக்கிய இந்நாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுதுறை அலுவலர்கள், தமிழ்நாடு   தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாகிகளுக்கு அப்பகுதி மக்கள் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here