திருவள்ளூர், மார்ச். 18-

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதால், அக்கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் தங்கள் புகார் மனுக்களை அங்கு வைக்கப்படிருந்த புகார் பெட்டியில் போட்டு விட்டுச் சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் அமலாக்கப் பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், பிற கூட்டங்களும் கிராமப் பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள் மேலும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்திருக்கும் நிலையில், இன்று திங்கட்கிழமை என்பதால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை எழுதி ஆட்சியர் அலுவலக நுழை வாயிலில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டு செல்கின்றனர்.

மேலும் அப்புகார் பெட்டியில் பொதுமக்கள் போடப்பட்டு வரும் மனுக்கள் அனைத்தையும் மாலையில் பரிசீலிக்கப்படு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here