தாமரைப்பாக்கம், ஜூலை. 08 –

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சியில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள காலனியில் சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு ரூ.25 லட்சம் செலவில் 18 வது வார்டு உறுப்பினர் ஜி. சரவணன் முன்னெடுப்பின் கீழ் இச்சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில், ரூ.7 லட்சம் செலவில் டாக்டர் அம்பேத்கார் நினைவு நுழைவாயல் ஒன்றினை ஒன்றிய குழு உறுப்பினர் தனது சொந்த நிதியில் அமைத்துக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவ்விரண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும்  நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக (ஓபிஎஸ் அணி)செயலாளரும்,எல்லாபுரம் ஒன்றிய குழு உறுப்பினருமான ஜி.சரவணன் தலைமை தாங்கினார். பகுஜன் சமாஜ் கட்சியின் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் லிட்டில்,5-வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ்,அதிமுக அம்மா பேரவை மாநில செயலாளர் வேதாரண்யம் மோகன்குமார்,பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் பிரேம் ஆகியோர் கலந்து கொண்டு சிமெண்ட் சாலை மற்றும் நுழைவாயிலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர்.

இதன் பின்னர், பேண்ட்-வாத்தியம் முழங்க வானவேடிக்கையுடன் பெருமாள் கோவில் வரையில் கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஜி,சரவணனின் பிறந்தநாளை முன்னிட்டு கிராம மக்கள் சார்பாக மெகா சைஸ் கேக் வெட்டி அவரது பிறந்த நாளை கொண்டாடினர்.

தொடர்ந்து இவ்விழாவில் பங்கேற்ற கிராம மக்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தாமரைப்பாக்கம் பாஸ்கர், பூவை நகர அதிமுக நிர்வாகிகள்,பல்வேறு அரசியல் கட்சியைச்சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்,கிராமப் பெரியோர்கள்,பொதுமக்கள், சுயஉதவி குழு பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here