lராமநாதபுரம், ஜூல 16-
ராமநாதபுரம் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் மறைந்த பெருந் தலைவர் காமராசரின் 117வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப் பட்டது.

ராமநாதபுரம் வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் இன்று  காலஞ் சென்ற பெருந்தலைவர் காமராசரின் 117-வது  பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. இதில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சோமசுந்தரம் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியின் முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்தர்  வேணி அனைவரையும் வரவேற்றார். மேலாண்மைக் குழு உறுப்பினர் பழனிவேல்ராஜன், நாராயணன் உட்பட இந் நிகழ்ச்சிக்கு மாணவ-மாணவியர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துக் கொண்டனர். ஆசிரியர் ஆசிரியைகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here