சென்னை, ஆக. 19 –
தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்காக ஒதுக்கப் பட்டுள்ள நிதியிலிருந்து, 2020-21, 2021-22 ஆகிய 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து சிறந்த 22 எழுத்தாளர்களை தேர்வு செய்து அவர்களின் நூல்கள் வெளிட ரூ.50, ஆயிரம் நிதியுதவி வழங்கப் படுவதாக ஆதி திராவிடர் நல ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் தேர்ந்தெடுக்கப்படும் 22 எழுத்தாளர்களில் 20 எழுத்தாளர்கள் ஆதி திராவிடர், ஆதி திராவிட கிருத்துவர், மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கும், மீதம் 2 எழுத்தாளர்கள் ஆதி திராவிடர் அல்லாதவர்களும் அடங்குவர் ஆக மொத்தம் ஆண்டுக்கு 11 சிறந்த எழுத்தாளர்கள் என்ற வீதத்தில் 22 சிறந்த எழுத்தார்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என அக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் அவர்களின் நூல் வெளியிட ரூ. 50, ஆயிரம் நிதியுதவி வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது..
பெயர், முகவரி, படைப்பின் பொருள் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய தமிழக அரசின் www.tn.gov.in ( website ) இணையத்தளத்தில் அறிந்துக் கொள்ளவும்,
மேலும் அந்தந்த மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
முறையான விண்ணப்பத்துடன் படைப்பினை எழுத்து வடிவில் 2 பிரதிகள். விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்கள் குறிப்பிட்டு அரசுக்கு சேர வேண்டிய கடைசி நாள் 20.09.2021 ஆகும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையர்,
ஆதி திராவிடர் நலத்துறை ஆணையரகம்,