பாண்டிச்சேரி, பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் ..
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைய நிர்ணயிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் புதுச்சேரி விவசாய சங்கம் மற்றும் அனைத்தும் தொழிற்சங்கத்தின் சார்பில் அம்மாநிலத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், பொதுப்பணித்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது, வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ட ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும், தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் முழக்கங்கள் எழுப்பியப் படி மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுப்பட்டனர்.
அப் போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த 1000த்திற்கும் மேற்பட்டோர் நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள சுப்பையா சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் வரை வந்து அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் தொழிற்சங்கங்களின் அம் மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பேருந்து செல்லமுடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட திமுகாவினர் அண்ணா சிலையில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை ஊர்வலமாக சென்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.























