புதுச்சேரி, மாரச். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்

புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட புதுச்சேரி, தேர்தல் துறை சார்பில் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் (SVEEP) திட்டத்தின் கீழ் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவ மாணவியர்களின் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன்  கம்பன் கலையரங்கிலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்பேரணி புஸ்ஸி வீதி வழியாக சென்று கடற்கரைச் சாலை, காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது. இதில் பல்வேறு  கல்லூரிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துக் கொண்டு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

முன்னதாக தப்பாட்ட கலைஞர்கள் பேரணியின் முன்பாக வாசித்துச் செல்ல அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவியின் பல்வேறு சாகச விளையாட்டுக்களை செய்து காட்டியபடி பின் தொடர்ந்தார். மூன்றாவதாக 300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி சென்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here