தெலுங்கில் முன்னணி கதாநாயகியான பூஜா ஜவேரி தொடரி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் சின்ன வேடத்தில் நடித்த அவர் தொடர்ந்து அதர்வா, பரத்துடன் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

பூஜா, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற துவாரகா படம் அர்ஜூன் ரெட்டி என்ற பெயரில் தமிழில் வரும் 15-ந் தேதி வெளியாகிறது. படத்தை தமிழாக்கம் செய்து வெளியிடும் ஏ.என்.பாலாஜி அளித்த பேட்டியில் ‘விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.

தமிழில் வசனத்தை ஆண்டனி ரிச்சர்டும், பாடல்களை நெல்லை பாரதியும் எழுதி இருக்கிறார்கள். பாடல்கள் நேரடி தமிழ் படங்களின் பாடல்கள் அளவுக்கு சிறப்பாக அமைந்து இருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன.

நான் ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் நிறுவன படங்களை தெலுங்கில் வெளியிட்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்தேன். பின்னர் இந்த துறைக்கு வந்தேன்’ என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here