தஞ்சாவூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சை ரயில் நிலையம் முன்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தனியார் விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அப்புறப் படுத்தினார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதிகளில் சமீப காலமாக சாலையோரங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சி மற்றும்தனியார் விளம்பரப் பிளக்ஸ் பேனர்கள் வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் மேலே விழுந்து உயிரிழப்பையும் மற்றும் படுகாயங்களையும் ஏற்படுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு பொருளாதாரம் உள்ளிட்ட பெரும்இழப்புக்களை ஏற்படுத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும்அதுக்குறித்து சமூகார்வலர்கள் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிமும் இருந்து எதிர்ப்பு தெரிவித்தும் அரசின் கவனத்திற்கும் தொடர்ந்து கொண்டு வந்தனர்,வருகின்றனர்.
மேலும் அதுக்குறித்து அவ்வப்போது அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி, ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தும் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் மற்றும் விளம்பர பேனர்கள்களை வைத்தவாறு உள்ளனர். மேலும் நகராட்சி மாநகராட்சி ஊராட்சி பகுதிகளில் முன அனுமதி பெற்று பாதுகாப்பாக வைக்க வேண்டும் என விதிமுறைகள் இருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் முன் அனுமதி பெறாமலேயே ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
அது போல் பொதுமக்கள் அதிகம் சாலையை கடக்கும் பகுதியான தஞ்சை ரயில் நிலையம் முன்பு மாநகராட்சி முன் அனுமதி பெறாமல் மூன்றுக்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது அதனை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர் மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களையும் அந்த பகுதியை விட்டு அப்புறப்படுத்தியது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.