திருவள்ளூர், ஜன. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் சீனிவாசன் …
திருவள்ளூரில் திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் உணவகத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களால் அப்பகுதியில் வேகமாக வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் 4 நபர்களுக்கு கால் மற்றும் உடல்களில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் வாகனங்களும் பெருத்த சேதம் அடைந்தது. அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இவ்விபத்துக் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது, விபத்து நடந்த பகுதி அதிகப் போக்குவரத்து நிறைந்த பகுதியெனவும், மேலும் இப்பகுதியில் அதிகப்படியான வணிக வளாகம் நிறைந்த பகுதியாக இருப்பினும் இங்கு சரியான வாகன நிறுத்தம் இல்லாததால், அப்பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதனைத்தொடர்ந்து, இன்று அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகத்திற்கு சாப்பிடவந்த வாடிக்கையாளர்களான மோகன், சதீஷ், சாம்ராஜ், பத்மராஜ் ஆகியோர் தனது பைக் மற்றும் கார்களை சாலையில் நிறுத்திவிட்டு உணவு சாப்பிட உணவகத்திற்குள் சென்று உள்ளனர்.
அப்பொழுது திருத்தணி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த வேன் ஒன்று உணவக்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள் மீது மோதியது. இந்நிலையில் உணவகத்திற்கு சாப்பிட இருச்சக்கர வாகனத்தில் வந்த புல்லரம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சார்ந்த 28 வயதுடைய பத்மராஜ் என்பவர் அவ்வுணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து, தனது வாகனத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது அவர் மீது வேன் மோதியதில் அவரது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், அப்பகுதியில் வாகனப் பாதுகாப்பில் இருந்த பாஸ்கரன் மற்றும் மேலும் அப்பகுதியில் இருந்த பாதசாரிகள் இரண்டு நபர்களும் விபத்தில் சிக்கி உள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயமுற்றவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவ்விபத்துக் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் இதனைப் போன்று பலமுறை பார்க்கிங் வசதிகள் இல்லாத உணவகம் உள்ளிட்ட பல்வேறு கடைகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவதாக அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் போக்குவரத்துறை மற்றும் மாவட்ட காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப் படுத்திடும் வகையிலும், வாகனப் போக்குவரத்தினை ஒழுங்குப் படுத்திடும் வகையிலும் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






















