திருவள்ளூர், பிப். 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில்    472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிரபு சங்கர்  தலைமையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்  ஆர். காந்தி வழங்கினார்.

தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் கல்விக்கடன் வழிகாட்டுதல் நாள் கொண்டாட மாவட்டம் தோறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பயில வழிவகை செய்திடவும், கல்விக்கடன் பெரும் வாய்ப்புகளை எளிதாக்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பாகவும், பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகள் கலந்துக் கொண்டு  மாணவர்கள் பயன்பெறும் வகையில், வித்யாலக்ஷ்மி போர்டல் இணையதளம் மூலம் கல்வி கடன் விண்ணப்பித்த 472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிரபு சங்கர் தலைமையில் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைப்பெற்றது.

அச்சிறப்பு மிகு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் ரூ. 51.38 கோடி மதிப்பிலான கல்விக் கடன் ஆணைகளை 472 மாணாக்கர்களுக்கு வழங்கினார்.

மேலும் அவ்விழாவில் திருவள்ளூர் நாடாளு மன்ற உறுப்பினர் ஜெயக்குமார், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், துணை பொது மேலாளர் சுசிலா பார்த்தசாரதி, மற்றும் இந்தியன் வங்கி மேலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்  மாணாக்கர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் எனத் திரளானவர்கள் அவ்விழாவில் பங்கேற்று விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்த்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here