தஞ்சாவூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சியில் 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ள தார்சாலை போடும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வார்டுகளில் 15 இடங்களில் தார் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டன. சுமார் 977 மீட்டர் நீளத்திற்கு இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கி உள்ளன.மேலும் அப்பணிகள் ஏப்ரல் மாதம் 15ம் தேதி நிறைவு பெறுகிறது.






















