மும்பை:
மத்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித் தொகையை அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகத்துக்கும் இடையே கடந்த ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தனது வருவாயில் 75 சதவீதம் தொகையை அரசுக்கு அளித்திருந்தது. இப்படி அளிக்கப்பட்ட மொத்த தொகை சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாயாகும்.
இருப்பினும், இன்னும் கூடுதலாக நிதியை அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியை மத்திய அரசு நிர்பந்தித்து வருவதாக கடந்த ஆண்டின் இறுதியில் தகவல் வெளியானது. இதை மத்திய நிதித்துறை அமைச்சகம் மறுத்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டில் முடிவடைந்த இரண்டாம் அரை நிதியாண்டு நிலவரப்படி தன்னிடம் உள்ள தொகையில் 28 ஆயிரம் கோடி ரூபாயை இடைக்கால உபரி தொகையான மத்திய அரசிடம் அளிக்க மத்திய ரிசர்வ் வங்கி இயக்குனரகம் (RBI board) இன்று தீர்மானித்துள்ளது.