புதுச்சேரி, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், மற்றும் தர்பூசினி வழங்கி வரும் திருபுவனை காவல்துறையினர். அவர்களின் சமூதாய அக்கறையை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கோடைகாலம் என்பதால் புதுச்சேரியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் வருகின்ற நாட்களில் புதுச்சேரியில் அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் உடலை வெயிலில் இருந்து பாதுகாக்கவும் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் பல்வேறு அமைப்பினர் புதுச்சேரியில் அங்காங்கே பந்தல் அமைத்து மோர், இளநீர், எலுமிச்சை சாரு, தர்பூசினி, கிருனிபழம், வெள்ளரி மற்றும் பல்வேறு பழசாருகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இதனிடையே புதுச்சேரி புறநகர பகுதியான திருபுவனையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது, இங்கு பணி புரிபவர்கள், துப்பரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்து கொள்ளும் விதமாக திருபுவனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் போலீசார் காவல் நிலைய வாசலில் நீர் மோர் பந்தல் அமைத்து தினமும் மோர், தர்பூசினி பழம் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர். இதனை அவ்வழியே பணி முடித்து செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் உட்கொள்கின்றனர். மேலும் இச்செயலுக்கு திருபுவனை காவல் நிலைய போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



















