நாமக்கல், நவ. 16 –
ராசிபுரம் விடுதலைக் களம் கட்சி அலுவலகத்தில் இன்று சுதந்திர போராட்ட வீரர் ஊமத்துரையின் 220 வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு அக் கட்சியின் நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஊமத்துரை 220வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் விடுதலை களம் கட்சி தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் மற்றும் அலுவலக செயலாளர் மோகன், சுப்பிரமணி ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரர் ஊமத்துரையின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்..
சுதந்திரப் போராட்ட வீரர் ஊமத்துரை ஜெகவீரகட்டபொம்மனின் மகனாக 1772 ல் பிறந்தார் அவரது இயற் பெயர் குமாரசாமி.ஆகும் இவருக்கு பேசும் திறன் குறைவாக இருந்ததால் மக்கள் இவரை ‘ஊமைத்துரை’ என்றழைத்தனர். போர்கால திட்டம் தீட்டுவதில் வல்லவராக இருந்தார்.
இவரது அண்ணன் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரராக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுத்ததால் போர் ஏற்பட்டது. 1799ல் ஆங்கிலேய அரசால் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். சிறையில் இருந்த ஊமைத்துரையை அவரது ஆதரவாளர்கள் சண்டையிட்டு மீட்டனர். மருது சகோதரர்களுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்தார்.
பல இடங்களுக்கு தப்பிச் சென்றவர் இறுதியில் ஆங்கிலேய அரசால் சிறை பிடிக்கப்பட்டு, 1801 ஆம் ஆண்டு, நவம்பர் 16 ஆம் நாள் அவரது 30வது வயதில் பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் துாக்கிலிடப்பட்டார். அவரின் வீரம் மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரின் நினைவு நாளான இன்று அவரைப் போற்றி வணங்குகிறோம்.