காஞ்சிபுரம், ஜூன். 18 –
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான்கேட் பகுதியில் வேகவதி ஆறு கரையோரம் குடியிருப்போர் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் காஞ்சிபுரம் வேகவதி ஆறு கரையோரம் குடியிருக்கும் ஏழைமக்கள் வீடுகளை அதிரடியாக இடிக்காதே, குடியிருப்போர் சம்மதம் பெறாமல் இடிக்க மாட்டோம் என தமிழக முதல்வர் அறிவிப்புக்கு மாறாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமே செயல்படாதே என்ற முழக்கங்களை எழுப்பி தமிழக அரசுக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்க்கும் எதிராகவும் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.
பல ஆண்டுகளாக காஞ்சிபுரம் வேகவதி ஆற்று பகுதிகளில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றோம். திடீரென வீடுகளை அதிகாரிகள் காலி செய்ய சொல்லியுள்ளது மிகவும் வேதனை அளிக்கின்றது. வேகவதி ஆற்றில் இருக்கும் வீடுகளை அகற்றும் திட்டத்தை திரும்பபெற வேண்டும் இல்லை என்றால் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடையும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

























