ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அளித்து வரும் பணி நெருக்கடிகளை கண்டித்தும் அப்போக்கினை கைவிடக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மாநில அளவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாநிலம்தழுவிய பெருந்திரள் முறையீடு இயக்க போராட்டம் நடத்தினர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் திரளாக குவிந்தனர். தமிழக அளவில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பணியாளர்களுக்கு அதிகமான பணிச்சுமையை அளித்து வருவதை கண்டித்தும் கைவிடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சோமசுந்தர் கோரிக்கை விளக்கஉரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேக், மாவட்ட பொருளாளர் சண்முகநாததுரை ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில்...