இராமநாதபுரம்,நவ.11-
இராமநாதபுரம் மாவட்டத்தில், பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாரந் தோறும் திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்கள் குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம். என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் பகல் 02.00 மணி வரை மாவட்ட காவல் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கருத்தரங்கு கூட்ட அறையில், காவல் கண்காணிப்பாளர் தலைமையில், அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் ‘காவல்துறை குறை தீர்ப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். இக்கூட்டத்தில், பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறு நேரில் வர இயலாதவர்கள், 9489919722 ( s.p ramnad ) மற்றும் 8300031100 (Hello police ) கைபேசி எண்களில் தகவல் தொpவிக்கலாம்.
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், மாடிப்படி ஏற முடியாதவர்களின் புகார் தொடர்பாக, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள வரவேற்பாளர் மூலம் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் கண்காணிப்பாளர் கீழ்தளத்திற்கு வந்து, அப்புகார் மனுக்களை நேரில் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அத்தகவல் குறிப்பில் தரப்பட்டுள்ளது.