இராமநாதபுரம், ஆக 15 –
இராமநாதபுரத்தில் உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தின வைர விழா கொண்டாடப் பட்டது. அக்கொண்டாட்டத்தில் பள்ளியின் தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன் உட்பட பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர். பின்பு இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.