தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கான பணி ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
சென்னை, செப். 5 –
அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினிப் பயிற்றுநர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாகத் தேர்வு செய்யப் பட்ட 52 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 நபர்களுக்கு அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா ஐ.பி.எஸ்., பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் ஐ.பி.எஸ்., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.