ஐதராபாத்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 27-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.
இதை தொடர்ந்து ஒருநாள் ஆட்டங்கள் மார்ச் 2, 5, 8, 10, 13 ஆகிய தேதிகளில் ஐதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொகாலி, புதுடெல்லி ஆகிய இடங்களில் முறையே நடக்கிறது. இந்தப்போட்டிகளில் விளையாடுவதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று முதல் பயிற்சியை தொடங்குகிறார்கள்.
இந்தியாவுடன் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-
ஆரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ் கோப், கம்மின்ஸ், அலெக்ஸ் கேரே, நாதன் கோல்ட்டர், நாதன் லயன், பெகரன்டார்ப், கானே ரிச்சர்ட்சன், டிஆர்சி ஹார்ட், ஸ்டோனிஸ், டர்னர், ஆடம் ஜம்பா, ஹை ரிச்சர்ட்சன்.