பொன்னேரி, ஏப். 23 –

கோடை வெப்பத்தை தணிக்க ஆங்காங்கே முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து அதனை முறையாக பராமரித்து இக்கோடைக்காலம் முழுவதும் அப்பகுதி மக்களின் தாகத்தினை தீர்த்திடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு ஆணை பிறப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நீர் மோர் பந்தலை திறந்து வைத்து மக்கள் நலப்பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று, பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில்  நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்சிக்கு நகர திமுகச் செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் தலைமை வகித்தார்.

மேலும், பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு  துவக்க நாளான நேற்று தர்பூசணி, இளநீர், மோர், குளிர்பானங்கள், வெள்ளரிப்பிஞ்சு, உள்ளிட்ட வெப்பத்தின் தாக்கத்தினைப் போக்கும் வகையில் அவைகளை அப்பகுதி பொது மக்களுக்கு வழங்கி தாகம் போக்கினார்கள். மேலும் இந்நிகழ்வில், கோலூர் கதிரவன், வாசுதேவன், சக்கரவர்த்தி, தீபன், உமாபதி, உள்ளிட்ட திரளான திமுக கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here