பொன்னேரி, ஜன. 04 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி அப்பகுதியில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில், உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி மாணவர்களுடன் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், எம்எல்ஏ துரை.சந்திரசேகர். வட்டாட்சியர் செல்வகுமார் .நகராட்சியின் தலைவர் பரிமளம் விஸ்வநாதன்.ஆகியோர் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
இப்பேரணி’இல் பங்கேற்ற அவர்கள் பழைய பேருந்து நிலையம் வரை வந்தனர்.மேலும் சாலைகளில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர். பொது மக்களுக்கு போதை ஒழிப்பு குறித்தும், தூய்மையாக இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள் போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் இளைய சமுதாயத்தை காக்கவும், பின்வரும் சந்ததியினருக்கு எடுத்துரைக்கவும் வேண்டும் எனவும் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வின் போது அவர் நாளை பழவேற்காடு கடற்கரையில் தூய்மை பணிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.























