புதுச்சேரி, ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி முதலியார் பேட்டை திருவிக நகரை சேர்ந்தவர் ரஞ்சனி. இவருக்கும் பாரதிதாசன் நகரில் வசிக்கும் சத்யா மற்றும் செந்தில்குமார் என்ற இருவர்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குழு லோன் ₹ 1.70 லட்சம் வாங்கித் தருவதாக கூறி 22 பவுன் நகை, ஸ்கூட்டர், 2 செல்போன் ரூபாய் 1.45 லட்சம் பணம் ஆகியவற்றை மேற்கண்ட 2 பேரும் சேர்ந்து ரஞ்சனியிடம் பெற்றுக் கொண்டு அவரை ஏமாற்றி விட்டதாகவும், அதனை திருப்பி கேட்டால் தன்னை மிரட்டுவதாகவும் ரஞ்சினி முதலியார் பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
அதனைத்தொடர்ந்து முதலியார் பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சத்தியா, செந்தில்குமார் மீது மோசடி உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சத்தியாவை கைது செய்தனர்.
மோசடி செய்த பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், தலைமறைவான செந்தில் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.





















