காஞ்சிபுரம், டிச. 11 –
மழை வெள்ளத்தால் சிதிலடைந்த வாலாஜாபாத் அவலூர் இணைப்பு தரைப்பாலம் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது இன்னும் ஒரு வாரத்தில் அப்பாலம் வழியாக போக்குவரத்து துவங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாஜாபாத் அவலூர் இணைக்கும் தரைப்பாலம் கடந்த காலத்தில் பெய்த வடகிழக்கு கனமழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. அதனால் அப்பாலம் வழியாக ஒரு மாதங்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. அப்பாலத்தை சீரமைக்கும் பணி தொடர்ந்து முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது. அதன் பணி விரைவில் முடிந்து இன்னும் ஒரு வாரத்தில் போக்குவரத்து துவங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த வட கிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதுப்போன்று காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் – அவலூர் இனைக்கும் தரைபாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தண்ணீரில் தரைபாலம் அடித்து செல்லப்பட்டது இதனால் கடந்த ஒரு மாதங்களாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
இதன் விளைவாக அவலூர், நெய்குப்பம், அமணம்பாக்கம் இளையனாவேலூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கிராம மக்கள் வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் செல்ல இரண்டு கிலோ மீட்டர்தூரம் கடக்க வேண்டியதை தரைபாலம் துண்டிக்கப் பட்டுள்ளதால் 40 கிலோ மீட்டர்தூரம் கடந்து சென்று வருகின்றனர்
இந்த சூழ்நிலையில் இரண்டு இராட்சத கிரேன் மூலம் தரைபாலத்தை சரி செய்யும் பணிகளை அதிகாரிகள் முழு வீச்சில் நடத்தி வருகின்றனர். இன்றும் ஒரு வாரத்தில் வாலாஜாபாத் – அவலூர் தரைபாலம் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் போக்குவரத்து துவங்கும் என அதிகாகள் தெரிவித்துள்ளனர்.