சோழவரம், அக். 09 –
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது உட்கட்சி தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியின்றி திமுக தலைவராக தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் பட்டதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் முன்பாக சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் தலைமையில் ஆயிரம் பேருக்கு தென்னமரக் கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் ஆயிரம் பேர்களுக்கு செல்வசேகரன் தென்னம் கன்றுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் சோழவரம் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பல்வேறு அணிகளை சார்ந்தவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானவர்கள் பங்கேற்று விழாவினை சிறப்படையச் செயதனர். பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.























