பட்டுக்கோட்டை, ஏப். 20 –

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலூகா மதுக்கூர் வட்டார வயல்வெளிப்பள்ளி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கையேடு மற்றும் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில் புலவஞ்சி. மஹாதேவபுரம், புளியங்குடி, மதுரபாஷினிபுரம், பெரியகோட்டை, கீழக்குறிச்சி, நெம்மேலி, ஓலயகுன்னம், அண்டமி மற்றும் காடந்தங்குடி  பகுதியை சேர்ந்த முப்பது விவசாயிகள் வீதம் 6 வகுப்புகள் நெல் வயல்வெளிப்பள்ளி கள அளவில் நேரடியாக வேளாண் துறை அலுவலர்கள் மூலமும் முன்னோடி விவசாயிகள் மூலமும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கையேடும் வயல்வெளி தொகுப்பும் வழங்கப்பட்டது. அண்டமி, காடந்தங்குடி கிராமங்களில் வேளாண்மை அலுவலர் சாந்தி, வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன், நெம்மேலி ஓலயகுன்னம் கீழக்குறிச்சி கிராமங்களில் வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு, மஹாதேவபுரம் கிராமத்தில் வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் மற்றும் புளியங்குடி கிராமத்தில் வேளாண்  துணை அலுவலர் அன்புமணி மற்றும் வேளாண் உதவி அலுவலர் தினேஷ் ஆகியோரால் வழங்கப்பட்டது.

மதுரபாஷினிபுரம் மற்றும் புலவஞ்சி கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி கலந்துகொண்டு விவசாயிகள் களத்தில் பெற்ற பயிற்சியை வருங்காலங்களில் தங்கள் வயல் வெளியிலும் செயல்படுத்தி தேவையற்ற செலவினங்களை குறைத்து தற்சார்புடன் இருந்திட கேட்டுக்கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here