செங்கல்பட்டு, மார்ச். 19 –

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2021 – 22 ஆம் ஆண்டு பல்வேறு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் தொலைந்துப் போனதாக கொடுக்கப்பட்ட 267 வழக்குகளும், மேலும் சைபர்க்ரைம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார்களும் இருந்த நிலையில், அதுக்குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P. அரவிந்தன் உத்தரவிட்டார்.

அதன் பேரில் மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் V. பொன்ராமு மேற்பார்வையில் , காவல் ஆய்வாளர் R. சிவக்குமார் . காவல் உதவி ஆய்வாளர் B. தனசேகரன் , தலைமை காவலர்கள் டேனியல் சுதாகர், குருநாதன் . சங்கர் , சிவா , காவலர்கள் கலைவாணன் , தேவநாதன் , முரளி , லெனின் , பரத் மற்றும் பெண் காவலர் இராஜேஸ்வரி ஆகியோர்கள் அடங்கிய செங்கல்பட்டு மாவட்ட சைபர் க்ரைம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதனடிப்படையில், 2021 மற்றும் 2022 – ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைந்து போன செல்போன்கள் சம்பந்தப்பட்ட 267 வழக்குகளில் தொடர்புடைய 176 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 31,86,088 / – ( முப்பத்தோரு இலட்சத்து எண்பதாயிரத்து எண்பத்தெட்டு ரூபாய் ) ஆகும்.

மேலும், சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு இதுவரை மொத்தம் ரூபாய் 26,22,502 / – ( இருபத்தாறு இலட்சத்து இருபத்து இரண்டாயிரத்து ஐநூற்று இரண்டு ) எதிரிகளின் வங்கிக்கணக்குகளில் முடக்கப்பட்டும். ரூபாய் 19,00,130 / – ( பத்தொண்பது இலட்சத்து நூற்று முப்பது ) பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here