பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்தில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை இளைஞர்கள் கவரும்படியாக உருவாக்கியிருப்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தின் வசூல் 15 கோடியை தாண்டியிருக்கும் நிலையில், சமீபத்தில் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இயக்குநர் பிரபுவுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மேலும் படக்குழுவினருக்கும் தயாரிப்பு தரப்பு சிறப்பு பரிசு அளித்துள்ளது.

இந்த படத்தில் நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா, அனந்த் வைத்தியநாதன், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here