தண்டையார் பேட்டை அருள்மிகு அருட்கோட்டம் முருகன் திருகோயிலில் நடைப்பெற்ற திருக்கார்த்திகை தீபவிழா .. பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோஹரோ முழக்கம் எழுப்பிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் ..
தண்டையார் பேட்டை, நவ. 26 –
வட சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு அருட்கோட்டம் முருகன் திருக்கோயிலானது 1966 ஆம் ஆண்டு பர்மா தமிழர்களால் 12 கிரவுண்ட் நிலப்பரப்பில் நிறுவப்பட்டது.
மேலும், இத்திருக்கோயில் தற்போது இந்து அறநிலையதுறையின் கீழ் வெகுச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கோயிலில் விநாயகர் அம்மன் நவக்கிரகம் உள்ளிட்ட கடவுள்களுக்கு தனிச்சன்னதிகளும் உள்ளது. தினசரி இத்திருக்கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறை வழிப்பாட்டிற்காக இங்கு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் இத்திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோபுரத்தின் தலைப்பு பகுதியில் மாலை 6 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டது காண்போர்களை மெய்சிலிக்க வைத்தது.
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு முருக பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் கூடிய சிறப்பு பூஜையும், எம்பெருமான் திருதேரில் திருக்கோயிலில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சொக்க பனை ஏற்றும் நிகழ்சியும் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து மனம் மகிழ்ந்தனர். தொடர்ந்து, அனைத்து பக்தர்களுக்கும் சுவாமி பிரசாதங்களும் அன்னதானம் வழங்க பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் திருப்பணி குழுவினர் வெகுச் சிறப்பாக செய்திருந்தனர்.




















