மறைமலைநகர், மே. 18 –
தெற்காசியா அளவிலான சாப்ட்பேஸ் பால் விளையாட்டு போட்டிகள் பூடான் நாட்டில் இம்மாதம் 8 – ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, பூடான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகள் பங்கேற்றது.
இவ்விளையாட்டு போட்டியில் 14 வயது மற்றும் 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட இந்திய ஆண்கள், பெண்கள் அணியினர் தங்கப் பதக்கம் மற்றும் கோப்பையை வென்றனர்.
மேலும் இப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற 14 வயது மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட இந்திய அணியில் இடம் பெற்ற மறைமலைநகர் புனித சூசையப்பர் பள்ளியில் படிக்கும் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா அப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.
தொடர்ந்து, இப்போட்டியில் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீரங்கணைகளை பள்ளி தாளாளர் சூசை மேரி, பள்ளியின் முதல்வர் மின்ஸி வர்கீஸ் ஆகியோர் மனதாரப் பாராட்டினார்கள்.























