இராசிபுரம், ஆக. 08 –
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் அலவாய்ப்பட்டி ஊராட்சியில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வார்டு எண் 8ல் ருபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் அலவாய்பட்டி முதல் ஆண்டிவலசு வரை தார்சாலை மேம்பாடு செய்யும் பணிகளுக்கான பூமிபூஜை ஒன்றிய திமுக பொறுப்பாளரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான RM.துரைசாமி மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் AR.துரைசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்விசுப்பிரமணியம், ஊராட்சிமன்ற தலைவர் ராஜா, ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரவீந்தர், திமுக கிளை செயலாளர்கள் பாலசுப்ரமணியம், அரிதேவன், பிரபாகரன், சிதம்பரம், மாரியப்பன், தனசேகரன், மணி, சிவா (எ) சிவகொழுந்து, ஊராட்சிமன்ற உறுப்பினர் சித்ரா கோபாலகண்ணன், மற்றும் ஊராட்சிமன்ற செயலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டார்.