திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக் கோயில் கும்பாபிஷேக விழா இன்றுக் காலை நடைப் பெற்றது அதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா யென்று குரலெழுப்பி பரவச பக்தி நிலைக் கொண்டு பெருமாளை தரிசித்தனர் .

திருவள்ளூர் ஜூலை, 11-

திருவள்ளூர் நகரின் மையப் பகுதியான மூர்த்தி தெருவில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் மணி மணி மணி திருக்கோயில் புனரமைக்கப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் பூர்த்தி செய்து  கருட பகவான் ஆஞ்சநேயர் சன்னதிகளுடன் விளங்கும் இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 9 மணிக்கு தொடங்கி 10.30 மணிக்குள் நடந்தது.

 https://youtu.be/RwzHo2uvE50

முன்னதாக நேற்று முன்தினம்   பகவத் ப்ராத்தனை, அக்னி பிரதிஷ்டை, மகா பூர்ணா ஹூதி, முதல் கால ஹோமம், ஆராதனை நடைப் பெற்றது. நேற்று காலை 2ம் கால மகா பூர்ணா ஹூதி, தீபாராதனைகள் நடந்தன. மாலை 4 மணியளவில் 3ம் கால மகா ஹோமம், யந்திர ஸ்தாபனம், பிம்ப வாஸ்து உட் பட பல்வேறுப் பூஜைகள் நடந்தன. 

இந் நிகழ்வுகளை தொடர்ந்து இன்று காலை 5 மணியளவில் விஸ்வ ரூப தரிசனம், விசேஷ ஹோமம், மகா பூர்ணா ஹூதி, கும்ப புறப்பாடு நடந்தது.

காலை 9 மணி தொடங்கி 10.30 மணிக்குள் நடந்த மகா கும்பாபிஷேகத்தில்

 

திரண்டிருந்த மக்கள் பக்தி பரவசத்துடன், ‘கோவிந்தா, கோவிந்தா’என்று முழக்க மிட்டனர். இன்று இரவு ஏழு மணியளவில் சேஷ வாகனத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திரு வீதி உலா புறப்பாடும் நடைபெற உள்ளது. இந்த விழா விற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தக்கார் மற்றும் செயல் அலுவலர் நாராயணன் மற்றும் அருள் மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கைங்கர்ய சபா சங்கம் செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here