கும்பகோணம், ஜூலை. 21 –

கும்பகோணம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பைரவர் தலமான அம்மாசத்திரம், ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் திருக்கோயிலில், தேய்பிறை அஷ்டமி நாளான இன்று இபிஎஸ் அரசியலில் தொடர் வெற்றிகள் பெற வேண்டி, முன்னாள் அமைச்சரும், அதிமுக இபிஎஸ் அணியின் அமைப்புச் செயலாளருமான ஆர். காமராஜ் பங்கேற்ற விசேஷ பிராத்தனையுடன், சிறப்பு யாகம் வளர்த்து, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜூலை 11 ல் நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.  அதன் விளைவாக ஏற்பட்ட கலவரத்தால் அதிமுக தலைமை அலுவலகத்தை தமிழக அரசு பூட்டிச் சீல் வைத்தது. அதன் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் அதிமுக தலைமை நிலையத்தின் சாவியை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பின் படி,  இபிஎஸ் வசம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இபிஎஸ் கரத்தை வலுப்படுத்தும் வகையில், எடப்பாடி  பழனிச்சாமி எடுக்கும் அனைத்து முடிவுகளும் வெற்றிகரமாக அமைந்திடவும், விரைவில் அவர் மீண்டும் தமிழக முதலமைச்சராக அரியணை ஏறிடவும், கும்பகோணம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பைரவர் தலமான அம்மாசத்திரம், ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் திருக்கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, முன்னாள் ஒன்றிய அதிமுக செயலாளர் அழகு த சின்னையன் ஏற்பாட்டின் பேரில், முன்னாள் அமைச்சரும், அதிமுக இபிஎஸ் அணி அமைப்புச் செயலாளருமான ஆர் காமராஜ் முன்னிலையில், விசேஷ பிராத்தனையுடன், சிறப்பு யாகம் வளர்த்து, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,  இராமநாதன், ராம்குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன்,  அசோக்குமார்,  முத்துகிருஷ்ணன் மாநில கைத்தறி பிரிவு செயலாளர் கே ஜி லெனின் சோழபுரம் பேரூராட்சி செயலாளர் ஆசாத் அலி உள்ளிட்ட  ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here