திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு 2 நாட்கள் முன்பு திரியோதசி நாளில் மாலை 4.30 மணிக்குமேல் 6 மணிக்குள் நந்திக்கு நடக்கும் வழிபாடு பிரதோஷ வழிபாடாகும். அதன்படி பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை கோவில் ராஜகோபுரம் அடுத்துள்ள பெரியநந்திக்கு அபிஷேகம் சிறப்பு ஆராதனை, பூஜைகள் நடந்தது. இதேபோல் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்கள் அடிஅண்ணாமலை ஆதிஅருணாசலேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here