ராமநாதபுரம், ஜூலை 28- எதிர்வரும் 31.07.2019 புதன்கிழமை ராமேஸ்வரம் மற்றும் இராமநாதபுரம் திருப்புல்லாணி சேதுக்கரை ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான யாத்ரிகர்கள் வருகை தருவார்கள். இதற்காக ராமநாதபுரம் எம்.பி கே. நவாஸ்கனி ரயில்வே நிர்வாகத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில் விடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் ராமேஸ்வரம் மற்றும் திருப்புல்லாணி சேதுக்கரையில் ஆண்டின் முக்கிய அமாவாசையான தை, புரட்டாசி, ஆடி ஆகிய அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தெர்ப்பெணம் செய்வதற்காக பக்தர்கள் லட்சகணக்கில் தமிழகம் முழுவதுமின்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆன்மீக பக்தர்கள் வருகை தருவது ஆண்டுதோறும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. பக்தர்கள் வருகைக்கு போதிய போக்குவரத்து வசதியின்மை காரணமாக நேரம் மற்றும் வீண் அலைச்சல் என பெரும் சிரமங்களை சந்நிக்கும் நிலை இருந்து வந்தது .இதில் வயோதியர்கள், மற்றும் சிறுக்குழந்தைகளோடு பயணம் செய்யும் குடும்பத்தினர்கள் என பெரும்பாலான பயணிகள் ரயில் போக்குவரத்தை அதிகம் விரும்புகின்றனர்.
அதனால் இராமேஸ்வரம் மற்றும் சேதுக்கரை வரும் யாத்ரிகர்களின் வசதிக்காக மதுரையிலிருந்து சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் K.நவாஸ் கனி ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார்,
அதனைத் தொடர்ந்து மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு 31.07.2019 புதன் கிழமை அன்று சிறப்பு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
இந்த சிறப்பு ரயில் 31.07.2019 புதன் கிழமை காலை 8.30 மணியளவில் மதுரையிலிருந்து புறப்பட்டு மானாமதுரை, பரமக்குடி, ராம நாதபுரம், மண்டபம் வழியாக பகல் 12.30 மணியளவில் ராமேஸ்வரம் வந்தடையும்,
அதே நாள் மாலை 4.30 மணியளவில் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக இரவு 7.30 மணி யளவில் மதுரை சென்றடையும். என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்துக்களின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்விட ஏற்பாடு செய்த எம்பி நவாஷ்கனிக்கு பல்வேறு தரப்பு மக்களும் நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.