திருச்சி:

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் தொலைநோக்கு பார்வையுடன் சீரிய முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதற்கு சான்றாக இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மகளிர்க்கு ஜெயலலிதா வழங்கியதுபோல, எடப்பாடி பழனிசாமி திட்டங்களை தொய்வின்றி வழங்கி வருகிறார். குறிப்பாக பொங்கல் பரிசு, 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் முதல் தவணையையும் வழங்கி உள்ளார்.ய

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-

கே: அ.தி.மு.க. கூட்டணி முழு வடிவம் பெறுவது எப்போது?

ப: அதற்கான வடிவம் ஏற்கனவே அமைக்கப்பட்டு தலைவர்கள், மூத்த அமைச்சர்கள் அந்த அமைப்பில் உள்ளனர். அவர்கள் கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுப்பார்கள். அது ரசகியம் தான். கூட்டணி இறுதி வடிவம் பெற்றதும் அறிக்கை வெளியிடப்படும்.

கே: அ.தி.மு.க.வில் தே.மு.தி.க. இடம்பெறுமா?

ப: ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தை என்பதே ரகசியம்தான். எனவே தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமா? வராதா? என்பதும் ரகசியம்தான்.

கே: அ.தி.மு.க. மீண்டும் திருச்சி தொகுதியை தக்க வைக்குமா?

ப: அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற திறமைக்கு உரியது. தற்போது நாங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து செயல்பட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here