திருவாரூர், மார்ச். 21 –
திருவாரூரில் தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேற்று வெளியிடப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இடம்பெறாததைக் கண்டிக்கும் வகையில் அரசு ஊழியர் சங்கம் சார்பாக திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டம் நகரின் முக்கிய பகுதிகளான திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிடாத திமுக அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எழுப்பினார்கள்.
.மேலும் இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்டத் தலைவர் சண்முகம், வட்ட செயலாளர் தம்பிதுரை, மாவட்ட பொருளாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




















