திருவாரூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜி.ரவிச்சந்திரன்…
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்கு சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செய்வதற்கான வசதி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 850 மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட 1200 முதியோர்கள் தபால் மூலம் வாக்கு பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் 2050 வாக்காளர்களின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று தபால் வாக்கு பதிவு பெற மாவட்டத்தில் 41 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன..
இந்த குழுக்கள் மூலமாக 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் வாக்குகளை பெற்று வந்தது.
அதன் ஒரு பகுதியாக நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று 12 தபால் வாக்குகளை பெற்றனர்.





















