செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வி.சி.க தொண்டரணி மற்றும் மாமல்லபுரம் நகர கட்சி நிர்வாகம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பொது மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, செப். 6-

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விசிக தொண்டரணி மற்றும் மாமல்லபுரம் நகர கட்சி நிர்வாகம் சார்பு நிலை கொண்டதாக மக்களால் கருதப்படும் போஸ்டர்களில் ஒன்றில் தமிழக அரசுக்கு வாழ்த்தும், மற்றொன்றில் அதிகார வரம்பு மீறி செயல்படும் அரசு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இருவேறு செய்திகள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் அங்கு மக்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் போஸ்டரில்..   

செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குநர்க்கு எதிராக அவர் செயல்பாடுகளில் காழ்புணர்ச்சியும், அதிகார அத்து மீறல், நிர்வாக சீர்கேடு அதன் விளைவாக துறை அலுவலர்களை அடிக்கடி இடம் மாற்றம் செய்வது. மேலும், திருப்போரூர் வட்டார மேலாளராகவும், சுகாதார ஊக்குநராகவும் இருந்த பலமுறை விருதுகள் பெற்ற சுமதி என்பவரின் பணி பறித்தல் நடவடிக்கை போன்ற., பல்வேறு, குற்றச்சாட்டுகளை மாவட்ட திட்ட இயக்குநர் ஸ்ரீதர்  மீது கூறி அதன் வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.    

செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குநராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர் இவர் இதற்கு முன்பாக காஞ்சிபுரம் மாவட்டத்திலும் திட்ட இயக்குனராக பணியாற்றிவர். இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட திட்ட இயக்குநர் ஸ்ரீதர்க்கு எதிராக பல்வேறு புகார்களுடன் சுவரொட்டி ஒட்டப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருப்போரூர் வட்டார இயக்க மேலாளர் சுமதிக்கு மீண்டும் பணியை வழங்க வேண்டும் இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டர் அணி சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here