சோழவரம், பிப்.. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மன்ற கூட்டம் நேற்று ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் அக்கூட்டத்திற்கு துணை பேருந்தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, ராமகிருஷ்ணன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சாலை வசதி, குடிதண்ணீர், மின்விளக்குகள் அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் 23 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.




















