திருநாகேஸ்வரம் நாகநாதசுவமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்தவாரி விழா : பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருளினார்
கும்பகோணம், டிச. 12 -
நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் இன்று முற்பகல் பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருள, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது ! கொரோனா ஊரடங்கு காரணமாக புஷ்கரணிக்குள் பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை...
நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீவஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி பெருவிழா ….
கும்பகோணம், மார்ச். 29 -
108 வைணவத் தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட ஸ்தலமாகவும் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ வஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு...
காட்டூர் அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் : திரளான சுற்று...
பொன்னேரி, ஜூன். 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காட்டூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன், மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கும்பாபிஷேகத்திற்காக நான்கு கால யாகசாலை வேள்வியுடன் துவங்கிய விழாவில் விக்னேஸ்வர பூஜைகளும், மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும் நடைபெற்றது. பின்...
விஷார் கிராமத்தில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அகத்தியர் மகரிஷி திருக்கோவில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள்...
காஞ்சிபுரம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள விஷார் கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தியர் மகரிஷிக்கு திருக்கோவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
16 அடி அகலமும் 33 அடி உயரமும் கொண்ட இத்...
அருள்மிகு ஸ்ரீகாசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரசித்திப்பெற்ற கும்பகோணம் மாசி...
கும்பகோணம், பிப். 25 -
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மாசிமகப்பெருவிழா இன்று காலை அருள்மிகு காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் ஆகியவற்றுடன் இணைந்து...
இராஜகோபாலபுரம் அருள்மிகு ஸ்ரீஐயன் பிடாரி அம்மன் திருக்கோயிலில் மிகுந்த பாதுகாப்புடன் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா ..
மயிலாடுதுறை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள இராஜகோபாலபுரத்தில் ஸ்ரீ ஐயன்-பிடாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் இத் கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 24 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து ஐயன்-பிடாரியம்மன் வீதி உலா காட்சி,...
திருவிடைமருதூர் அருள்மிகு ஸ்ரீசிவசூரியனார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ரதசப்தமி பெருவிழா ..
கும்பகோணம், ஜன. 20 –
திருவிடைமருதூர் அடுத்த நவகிரக கோயில்களில் பிரதானமாக விளங்கும் பிரசித்தி பெற்ற சிவசூரியனார் கோயிலில் ரதசப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
திருவிடைமருதூர் தாலுகா, நவகிரக கோவில்களில் பிரதானமாகவும், சூரியனின் சிறப்பு ஸ்தலமாகவும், இருந்து வரும், திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சிவ சூரியனார்...
நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், மே. 24 -
கோயில் நகரமாகப் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயில், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம், 108 திவ்ய தேசங்களில் 21வது தலமும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் நடுநாயகமான தலமும்...
மன்னார்குடி அருள்மிகு பிரஹன் நாயகி அம்பாள் சமேத ஜெயங்கொண்ட நாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசன விழா …
மன்னார்குடி, டிச. 27 –
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருள்மிகு பிரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ ஜெயங்கொண்டநாதர் திருக்கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மையார் மாணிக்கவாசகர், ஆகியோருக்கு பல்வேறு அபிஷேக திரவியங்களான மாபொடி, மஞ்சள்தூள், திராவிபொடி , பழ வகைகள் ,...
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்கு தயராகும் … உக்கம்பரும்பாக்கம் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் ..
காஞ்சிபுரம், ஆக. 30 -
காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோயில்.
இத் திருக்கோயிலில் நட்சத்திர விருட்ச விநாயகர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்கிற பிரகஸ்பதி, சனீஸ்வர...

























